Posts

Showing posts from September, 2021

'தி பிளாஸ்ட்': யுவனின் பெருவெடிப்பும், சிறு தோல்வியும்!

Image
  கட்டுரை "வாழவும் இறக்கவும் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு எதிராக என் இசை போராடுகிறது"                                                                                                                            - பாப் மார்லி. தமிழில் திரையிசைப் பாடல்களைத் தாண்டி சுயாதீன இசையில் உருவாகும் பாடல்கள் அண்மையில் உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. காதல், நட்பு என்ற வழமையைக் கடந்து சமூக உரிமைகளை மீட்டெடுக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட பாடல்களும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய இசை ஆல்பம் ஒன்று, அந்த இசையமைப்பாளர் பின்னாட்களில் பெரும்பான்மை ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், அக்காலகட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெறாமல் போனது. அக்காலகட்டத்தின் முக்கிய...

பாப் மார்லி: அன்பை விதைத்த இசைப் போராளி

Image
கட்டுரை   இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது… இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட கருப்பின மக்களின் வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது… உலகில் எங்கெல்லாம் ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறதோ, அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் எழுச்சியின் அடையாளமாக இரண்டு பேர் இருப்பார்கள். ஒருவர் சேகுவேரா, மற்றொருவர் பாப் மார்லி. இன்றைய இளைஞர்கள் அணியும் டி ஷர்ட்டுகளே அதற்குச் சான்று. தன் கிடார் மூலம் ஒடுக்குமுறைகைளை எதிர்த்து, அன்பை விதைத்த பாப் மார்லி பற்றிய பாப்கார்ன் குறிப்புகள்...     பாப் மார்லியின் 'One cup of Coffee' சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வமாக இருந்த மார்லியை, ஜமைக்கா மக்களின் இசை வெகுவாக கவர்ந்தது. பிற்பாலத்தில் பண்ணி வெய்லர் என்று அறியப்பட்ட பள்ளி நண்பன் நிவைல் லிவிங்க்ஸ்டன் உடன் சேர்ந்து பாடல்கள் இசைக்கத் தொடங்கினார் பாப் மார்லி. வறுமை காரணமாக 14 வயதுக்கு மேல் பள்ளிக் கல்வியை தொடர முடியாத சூழலில் வெல்டிங் கடையில் வேலைக்குச் சேர்ந்த மார்லி, கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து பாடல்கள் பாடிக்கொண்...