Posts

Showing posts from July, 2021

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

Image
  கட்டுரை ‘காலனியம் என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறையாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு, உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி’ 1 அன்பானவர்களே ‘கதை’ நிகழ்வுக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். மாதந்தோறும் கூடும் இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் தரும் ஆதரவு வியக்க வைக்கிறது; தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது. நாம் கதைகளை உருவாக்குவதில்லை, கதைகள்தாம் நம்மை உருவாக்குகின்றன. நம் மூலமாக கதைகள் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்பதே உண்மெய். சரி, வழக்கமாக கதைகளை உரையாடும் நாம், இம்முறை கட்டுரையை விவாதிக்க இருக்கிறோம். கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதாலும், கட்டுரையை ஓர் கதையைப் போல சொல்லிப் பார்க்கும் மாற்று முயற்சியாக இருக்கும் என்பதாலும் இம்முறை கட்டுரை விவாதிக்கப்படுகிறது.  அண்மையில், சமூகம், அரசியல் குறித்து ஐம்பது வயது மதிக்கத்தக்...