கலையே பிரதானம்
திரை “வா ழ்வின் விடை காண இயலாத புதிர்த் தன்மையைப் போலவே எனது படங்களில் இழையோடுகிற மெல்லிய வினோதத் தன்மையையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.” – ஜி. அரவிந்தன் அண்மைக்காலமாக, கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகான திரைப்படச் சூழலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, இந்தியச் சூழலில் இணைய தொடர்களின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பரீட்சார்த்த முயற்சிகள் செய்யப்படுகின்றன. இதனால் திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, மாற்று சினிமா (அ) ஆர்ட் ஃபிலிம் போன்ற வெகுஜனத் தன்மையல்லாத, முழுக்கக் கலைத்தன்மைக்காக எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பது போல் தோன்றுகிறது. அதற்கான இயக்கங்களும் முன்போல் ஆக்கப்பூர்வமாகச் செயற்படுவதில்லை. இணைய நிறுவனங்களின் வருகையால் பல உதிரிகள் காணமலாகியிருக்கும் சூழலில் மாற்று சினிமாவின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகைய சூழலில் சினிமா இயக்கங்கள் தீவிரமாகச் செயற்பட்ட மலையாள திரையுலகம் பல வகையிலும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது. வெ...