Posts

Showing posts from April, 2021

தோப்பிலும் தோப்பிலைப் பற்றியும்

Image
  மதிப்புரை தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும் தோப்பில் முகம்மது மீரான் (ப-ர்): இர. பிரபா எதிர் வெளியீடு 96, நியுஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002 பக். 120 ரூ. 130 தோ ப்பில் முஹம்மது மீரான் மறைந்து சில மாதங்கள் கழித்து அவரது தேங்காய்ப் பட்டணத்து இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு குடியிருந்தவர், “தேங்காய்ப் பட்டணம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு யூடியூப் வலைக்காட்சியில் நிறையக் காணொளிகள் இருக்கின்றன. ஆனால் தோப்பிலைப் பற்றியும் இந்த வீட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே” என வருத்தப்பட்டார். தேங்காய்ப் பட்டணம் பற்றி அறியாதவர்களுக்குத் தோப்பிலின் கைபிடித்து உலாவரும் வாய்ப்பைத் தந்திருக்கிறது இந்நூல். தோப்பிலின் மூளையிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் தேங்காய்ப் பட்டணம் நிறைந்திருந்ததுபோலும். அதன் பூகோளவியல், சமூகவியல், வரலாறு, உணவு, கலை என அனைத்தையும் கதை சொல்வதுபோலச் சொல்கிறார். அவருக்கு மட்டும் எப்படி அத்தனை கதைகள் தெரிந்திருக்கிறதென்று வியப்பாக உள்ளது. தன்னுடைய பிறந்தநாள் குறித்துக்கூட அவரிடம் கதை இருக்கிறது. ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை சொல்கிற...

பாபாசாகேப் அமர் ரஹே...

Image
சிறுகதை அ திகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார்; புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும் எழுதிவைத்துக்கொண்டார். “என்ன சீக்கிரம் எழுந்துட்ட,” என்றபடி மேசைமீது தேநீரை வைத்தார் தேவி தயாள். “நிறைய டைப் பண்ணனும், ஆஃபிசுக்கும் போகனும்ல. அதான்… சரி பாபா எழுந்துட்டாரா?” “இன்னும் இல்ல, இப்பத்தான் நியூஸ் பேப்பர டேபிள் மேல வச்சிட்டு வரேன். நைட்டு எப்போ தூங்குனீங்க, ஒண்ணா ரெண்டா?” “கிட்டத்தட்ட ரெண்டாயிடுச்சு. அதுக்கு மேல அவருக்கும் முடியல.” தேநீரைப் பருகியபடி சொன்னார் ராட்டு. “உடம்பு மோசமாயிட்டே போகுது. ஆனா இவரு இன்னமும் இப்படியே இருக்காரு,” தேவி தயாளின் குரலில் வருத்தம் தெரிந்தது. சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு “அது அவருக்கும் தெரிஞ்சிருக்கு, அதனாலதான் இந்தப் புத்தகங்கள்லாம் சீக்கிரம் வெளிவரணும்னு நினைக்கறாரு. போன மாசம் நேபால்ல…” என ராட்டு சொல்லிக்கொண்டிருந்தபோது அறையினுள்ளிருந்து மணி சத்தம் கேட்டது. “சாகேப்…” என்று இருவரும் விரைந்தனர். வெளியே எவ்வளவு வெயில் அ...

புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்

அ சாதாரண சூழலுக்குப் பிறகு மக்கள் சற்று சுதந்திரமாக கூடியிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி குறித்துத் தொடர்ந்து பலரது கருத்துகளைப் பதிவுசெய்யும் முயற்சியில் இன்று, கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்த இளம் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கவிருக்கிறோம். இனி அவருடனான உரையாடல்… பொதுவாக முதலில் கேட்கும் கேள்வியை உங்களிடம் கடைசியாகக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். எனவே இரண்டாவது கேள்வியிலிருந்து தொடங்கலாம். கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து கொஞ்சம் வெளிவரத் தொடங்கியதற்குப் பிறகான புத்தகக் காட்சி இது. கொரோனா காலத்தையும், இந்தப் புத்தகக் காட்சியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? கொஞ்சம் புதுசுதான். அச்சம், பதற்றம், குதூகலம், ஆர்ப்பரிப்பு, வெறுமை எனக் கலந்துகட்டிப் பந்தாடியது. அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். வேறொன்றும் செய்வதற்கில்லை. இது நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினருக்குத்தான். உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கொரோனா காலத்திலும் யதார்த்தம் மாறவில்லை. உழைப்புச் சுரண்டல் இன்னும் அதிகமாகவே இருந்த காலகட்டம் இது. மற்றபடி, தீண்டாமையின் கொடுமையைப் பிற சமூகத்தினரும் கொஞ்சம் உணர்ந்திரு...