Posts

Showing posts from 2021

'தி பிளாஸ்ட்': யுவனின் பெருவெடிப்பும், சிறு தோல்வியும்!

Image
  கட்டுரை "வாழவும் இறக்கவும் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு எதிராக என் இசை போராடுகிறது"                                                                                                                            - பாப் மார்லி. தமிழில் திரையிசைப் பாடல்களைத் தாண்டி சுயாதீன இசையில் உருவாகும் பாடல்கள் அண்மையில் உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. காதல், நட்பு என்ற வழமையைக் கடந்து சமூக உரிமைகளை மீட்டெடுக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட பாடல்களும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய இசை ஆல்பம் ஒன்று, அந்த இசையமைப்பாளர் பின்னாட்களில் பெரும்பான்மை ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், அக்காலகட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெறாமல் போனது. அக்காலகட்டத்தின் முக்கிய...

பாப் மார்லி: அன்பை விதைத்த இசைப் போராளி

Image
கட்டுரை   இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது… இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட கருப்பின மக்களின் வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது… உலகில் எங்கெல்லாம் ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறதோ, அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் எழுச்சியின் அடையாளமாக இரண்டு பேர் இருப்பார்கள். ஒருவர் சேகுவேரா, மற்றொருவர் பாப் மார்லி. இன்றைய இளைஞர்கள் அணியும் டி ஷர்ட்டுகளே அதற்குச் சான்று. தன் கிடார் மூலம் ஒடுக்குமுறைகைளை எதிர்த்து, அன்பை விதைத்த பாப் மார்லி பற்றிய பாப்கார்ன் குறிப்புகள்...     பாப் மார்லியின் 'One cup of Coffee' சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வமாக இருந்த மார்லியை, ஜமைக்கா மக்களின் இசை வெகுவாக கவர்ந்தது. பிற்பாலத்தில் பண்ணி வெய்லர் என்று அறியப்பட்ட பள்ளி நண்பன் நிவைல் லிவிங்க்ஸ்டன் உடன் சேர்ந்து பாடல்கள் இசைக்கத் தொடங்கினார் பாப் மார்லி. வறுமை காரணமாக 14 வயதுக்கு மேல் பள்ளிக் கல்வியை தொடர முடியாத சூழலில் வெல்டிங் கடையில் வேலைக்குச் சேர்ந்த மார்லி, கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து பாடல்கள் பாடிக்கொண்...

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

Image
  கட்டுரை ‘காலனியம் என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறையாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு, உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி’ 1 அன்பானவர்களே ‘கதை’ நிகழ்வுக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். மாதந்தோறும் கூடும் இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் தரும் ஆதரவு வியக்க வைக்கிறது; தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது. நாம் கதைகளை உருவாக்குவதில்லை, கதைகள்தாம் நம்மை உருவாக்குகின்றன. நம் மூலமாக கதைகள் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்பதே உண்மெய். சரி, வழக்கமாக கதைகளை உரையாடும் நாம், இம்முறை கட்டுரையை விவாதிக்க இருக்கிறோம். கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதாலும், கட்டுரையை ஓர் கதையைப் போல சொல்லிப் பார்க்கும் மாற்று முயற்சியாக இருக்கும் என்பதாலும் இம்முறை கட்டுரை விவாதிக்கப்படுகிறது.  அண்மையில், சமூகம், அரசியல் குறித்து ஐம்பது வயது மதிக்கத்தக்...

கார்த்திக் சுவாமிநாதன் கேமரா வழியே தனுஷ்

Image
திரை அ ரங்கு முழுவதும் கைதட்டல்கள் ஒலிக்க, என்ன நினைப்பதென்றே தெரியாமல் கார்த்திக் தடுமாறும் அந்தக் காட்சி... தன் திரைவாழ்வில் இப்படியான நடிப்பை, அதற்கு முன்னரும் பின்னரும் தனுஷ் வெளிப்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். ஒரு கதாபாத்திரம் தன்னை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேறும் வித்தை தனுஷுக்கு வாய்த்திருப்பது நிச்சயம் ஆச்சரியமானதல்ல. தன் தேர்வுகள் குறித்தும், தன் அளவுகோல்கள் குறித்தும், தன் திறமை குறித்தும் அவருக்குத் தெளிவான பார்வை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் தனிப்பட்ட தனுஷ் பிரதிபலித்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை இருப்பதும் முக்கியமானது. ஆனால் அதையும் மீறி கார்த்திக் சுவாமிநாதனுக்குள் தனுஷ் வெளிப்பட்டதுதான் இக்கட்டுரையின் மையப்புள்ளி. கஸ்தூரிராஜா – விஜயலட்சுமி தம்பதியினரின் கடைசி பிள்ளை தனுஷ். மூத்தவர் செல்வராகவன், படிப்பில் கெட்டிக்காரர்; பொறியியல் பட்டதாரி. இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். குடும்ப சூழல் காரணமாக தனுஷ் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைகிறார். நமக்குத் தெரிந்தவரைய...