Posts

Showing posts from April, 2025

காஞ்சுர்மார்கின் இளவரசன்

Image
சிறுகதை ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்   அ ப்போது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பந்தைத் துரத்திக்கொண்டு ஓடி, தடுமாறி கீழே விழுகிறேன். அதன்பிறகு எதுவும் நினைவிலில்லை. ஒரேயொரு காட்சி... நான் வலியில் துடிப்பதைப் பார்த்து அவன் பதைபதைப்புடன் கண் கலங்க நின்றது, அது மட்டும்தான் மனதிலிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது இச்சம்பவம்தான் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது மீண்டும்... வீட்டிலுள்ள எனதறையில் இருக்கிறேன். சுற்றி பொருட்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. எதையோ தேட வந்தேன், அது கடந்த காலத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. அடிக்கடி நடப்பதுதான். என்னதான் புதிய புதிய விஷயங்களைச் செய்தாலும் பழைய நினைவுகளை நோக்கித்தான் மனம் செல்கிறது. சுகமான நினைவுகளெல்லாம் இல்லை, இப்போதிருக்கும் அதே வலியும் போராட்டமுமான நினைவுகள்தாம். என்ன, அப்போது விளையாடிக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம். இந்திய அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த தொப்பியைக் காணவில்லை. அதைத் தேடத்தான் வந்தேன். பள்ளி அளவிலான போட்டிகள் தொடங்கி, கவுன்ட்டி போட்டிகள்வரை பல அணிகள், பல தொப்பி...

டாக்டர் அம்பேத்கரின் வாழ்வில் திரைப்படங்களும் கலைஞர்களும்

Image
  ஸ்பவ சாய்ராம் தமிழில்: சிவராஜ் பாரதி டாக்டர் அம்பேத்கரின் பொது வாழ்வு குறித்தும், பலரது வாழ்க்கையை மாற்றிய அவரது சமூக விடுதலைக்கான செயற்பாடுகள் பற்றியும் பல நூல்களும் கட்டுரைகளும் வெளியாகியிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றி மிகக் குறைந்த தகவல்களே (அதுவும் ஆங்கிலத்தில்) கிடைக்கின்றன. இக்கட்டுரையில் அவரது தனிப்பட்ட வாழ்வின் ஆச்சரிய அம்சமான அவர் பார்த்த திரைப்படங்கள்; உரையாடிய திரை - இசை ஆளுமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருக்கிறேன். மேலும், 1942இல் திரைப்பட இதழொன்றுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் அளித்த நேர்காணலின் சில பகுதிகளை மேற்கோள் காட்டியிருப்பது இக்கட்டுரையின் தனித்துவமாகும். டாக்டர் அம்பேத்கர் என்னென்ன திரைப்படங்கள் பார்த்தார்? அவர் உரையாடிய கலை ஆளுமைகள் யாவர்? இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிப்பது சிரமம். அதனால், அவரது வாழ்வை மூன்று கட்டங்களாகப் பிரித்து அவர் பார்த்த திரைப்படங்களையும் சந்தித்த ஆளுமைகளையும் கண்டறிய முயன்றிருக்கிறேன். முதற்கட்டம் (1910 - 1930) டாக்டர் அம்பேத்கர் பார்த்த முதல் படம் 1927இல் வெளியான ‘Uncle Tom’s Cabin’ என்று நம்பப்படுகிறது. இ...