Posts

Showing posts from 2022

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

Image
அவ்வாய லோடும் பைத்துல் முகத்தீ சழகுமிகுஞ் செவ்வான பள்ளித் திருவாய லாமதிற் சென்றுமதிற் றவ்வாம லங்ங னகத்தா சவிபுதர் தங்களின் கோன் சவ்வான தூணைக் கைவிர லாற்றமர் தானிட்டாரோ                                                                                     (மிகுறாசு மாலை: 111) நபிகள் நாயகம் விண்ணுலகம் சென்றடைவதற்கும் முன் தொழுகைக்காகப் பைத்துல் முகத்தீசிற்குச் செல்லும்போது, தாம் ஏறிவந்த புறாக் என்னும் வாகனத்தை அங்குள்ள தூணில் தம் சுட்டுவிரலால் துளைசெய்து அதில் கட்டி, தம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களோடு கூடியுற்றார் என்ற பொருளில் ஆலிப் புலவர் பாடிய பாடலே இது. இப்பாடலை ஆலிப் புலவர் அரங்கேற்றுகையில், ‘சவ்வான தூணைக் கைவிர லாற்றமர் தானிட்டாரோ’ என்ற வரியினைப் புலவர் உரைக்கும்போது முச்சுடர் அண்ணல் பெருமான் அவ்விடத்தில் தோன்றி, “ஆலி, அச்ச...