Posts

Showing posts from February, 2023

விடுதலையின் தூரம் 116 மைல்

Image
விடுதலையின் தூரம் 116 மைல் ‘Oh go down, Moses,     Way down into Egypt's land, Tell old pharaoh,     Let my people go.’ காட்சி 1 அமெரிக்காவின் தென் மாகாணத்தில் உள்ள மேரிலாந்து பகுதிக்கும் டெலவெயர் ஆற்றுக்கும் இடையே உள்ள மரப்பாலத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கியுடன் பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் மனங்களில் இருந்தது ஒரே சிந்தனைதான். ‘மற்ற அடிமைகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அந்தத் துரோகிக்குக் கொடூரமான தண்டனை வழங்க வேண்டும்.' தூரத்தில் சிறு அசைவு தெரிகிறது. இரட்டை குதிரை பூட்டிய வண்டி வருகிறது, நீண்ட அங்கியும் தலையில் தொப்பியும் அணிந்த கனவான் அதை ஓட்டி வருகிறார்.  “எதுக்காக இங்க கூடியிருக்கீங்க, ஏதாவது விஷேசமா?” “அந்தத் திருடன் மறுபடியும் வந்திருக்கானாம். அதான் மோசஸ். அவனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்னு..” “உங்களால முடியலன்னா சொல்லுங்க, நான் புடிச்சத் தரேன். இப்ப வழி விடுங்க, எனக்கு வியாபாரம் இருக்கு” “இரு இரு, வண்டியில என்ன இருக்குன்னு காட்டு” “நான் லூதர் கிராண்ட் பையங்கிறது மறந்து போச்சா” “சரி சரி கிளம்பு,” டெலவெயர் ஆற்றங்கரையில்...

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

Image
நேர்காணல்: யுங் சல் ஆன் (byung - chul ham) ஆங்கிலத்தில் : செர்ஜியோ சி. ஃபன்ஜல் (Serjio C Fanjul) தமிழில் : சிவராஜ் பாரதி அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் - ஜெர்மன் தத்துவவியலாளர் யுங் சல் ஆன். உருவில்லா அருவ பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆளுகின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஆன். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளர், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளிவரவிருக்கும் ஆனின் 'அபொருள்' (non objects) புத்தகத்தில், இருப்புக்கான தேவைகள் உண்டாக்கும் அழுத்தங்களால் துயருறும் நம் சமூகத்தை, சிறந்த அறிஞர்களின் கோட்பாடுகளையும் கலாச்சாரக் கூறுகளையும் கொண்டு ஆராய்கிறார். மக்களின் சுயமோகத்தைச் சாடும் ஆன், நவ முதலாளித்துவ அமைப்பிடம் சரணடையும் உளவியலையும் பொழுதுபோக்குகளின் புதிய வடிவங்களை...

சிறையிலிருந்து...

Image
ஷர்ஜீல் இமாம் தமிழில் : சிவராஜ் பாரதி மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020இல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அவர் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இந்தச் சிறை வாழ்க்கை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்னும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, என்னை நான் எப்படிப் பார்க்கிறேன்? மற்றொன்று, பிறர் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்? நிச்சயமாக இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதலில் மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஆய்வோம். மக்கள் என்னைப் பலவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கு நான் தீவிரவாதி; தில்லியில் கலவரத்தைத் தூண்டியவன். அவர்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. நான் கைதாகி ஒருமாதம் கழித்துதான் கலவரம் ஏற்பட்டது என்ற உண்மையில் அவர்களுக்கு அக்கறையில்லை. இங்கிருக்கும் மற்றோர் அறிவாளிக் கூட்டம் சொல்கிறது, "இவன்...