பிச்சிப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும்


 அஞ்சலிதோப்பில் முஹம்மது மீரான் (1944 - 2019)



ஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா,’ நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்த வாப்பாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன்புத்துணர்வோடு வரவேற்றார்அந்நேரம் அவர் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார். ‘பிள்ளேய்கடுப்பம் கூட்டி ரெண்டுச் சாயா!’ என்று உற்சாகமானார் வாப்பாஎன் முகம் அத்தனை உற்சாகமாய் இல்லாததைக் கண்டு விவரம் கேட்டார். ‘தோப்பில் மவுத்தாயிட்டாரு’ என்றேன். ‘படச்சோனே!’ என்று அதிர்ந்தார். ‘இன்னாலில்லாஹி...’ என்று முணுமுணுத்தார்.


பிறகு எதுவும் பேசாமல் நினைவுகளுக்குள் மூழ்கினார்சைனபா தாத்தா சாயா கொண்டு வந்தார்வாப்பாவைத் தட்டியெழுப்ப நகர்ந்தபோது தாத்தா தடுத்து, ‘நான் பாத்துக்கறேன்’ என்று தலையசைத்தார்வாப்பாவுக்குப் பின்னிருந்த மேசையை இழுத்துஅதன்மீது சாயாவை வைத்துவிட்டு உள்ளே சென்றார் தாத்தாசாயாவின் ஆவி வாப்பாவின் நாசியை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததுநான் சாயாவைக் குடித்துவிட்டுத் தாத்தாவை அழைத்து டம்ளரைக் கொடுத்துகிளம்புவதாகச் சொன்னேன்வாப்பா ஏதும் பேசக்கூடிய நிலையில் இல்லையென்பதால் சலாம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ‘சீனிவாசன் வீட்லதான் இருப்பான் போய்ப் பாரு’ என்றார் வாப்பாஒரு நொடி திரும்பிப் பார்த்தேன், ‘வரீங்களா?’ என்று கேட்டேன்.


அந்த கதைய உனக்கு நீயே சொல்லிக்கோ’ என்றார் வாப்பாபுன்னகைத்தபடி கிளம்பினேன்எனக்கு நானே கதை சொல்லிக் கொள்கிறேன்கேட்பதும் கேட்காதிருப்பதும் உங்கள் விருப்பம்.


அனந்தசயனம் காலனியில்தான் முதன்முதலாகத் தோப்பிலைச் சந்தித்தேன்பேராசிரியர் சீனிவாசனின் வீட்டைத் தேடி அலைந்துகொண்டிருந்தவரைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்ததுநகரங்கள்மீது பயமும் வெறுப்பும் கொண்ட அந்தக் கிராமத்து மனிதர் ஏதோ ஒரு வகையில் என்னை ஈர்த்துவிட்டார்அதற்கு முன்பு சூடாமணிதான் இப்படி என்னை ஈர்த்திருந்தார்இருவருக்கும் ஒற்றுமைகள் இருக்கிறதென்பது இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறதுசீனிவாசனைப் பார்க்காமலே ஊர்திரும்பிவிட்ட தோப்பிலை மீண்டும் எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.


பேராசிரியர் சீனிவாசன் இன்றும் பேராசிரியராகவே இருந்தார்இவர்களுக்கெல்லாம் வயதாவதில்லைபோலகொடுத்துவைத்தவர்கள்தோப்பில் இறந்துவிட்ட தகவலைச் சொன்னேன்நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். ‘என் மீது எந்த தப்புமில்லைஇந்த காலனியில் இரண்டு மூன்று சீனிவாசன்கள் இருக்கிறோம்’ என்றார். ‘புரிகிறது’ என்றேன்மீண்டும் மௌனம்வேறுசில இடங்களுக்கும் செல்ல வேண்டுமென்று அங்கிருந்து கிளம்பினேன்உங்களுக்கு அல்லாப் பிச்சை மோதீனைத் தெரியுமாநீண்ட நாளாகத் தேடிக்கொண்டிருந்த தோப்பிலைஅல்லா பிச்சை மோதீன்தான் மீண்டும் அறிமுகப்படுத்தினார்அதன் பின்னர்தான் நாங்கள் நெருக்கமானோம்அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்இப்போது நாம் அஞ்சுவண்ணம் தெரு’ வுக்கு போகப் போகிறோம்ஒரு காலத்தில் இந்தத் தெருவுக்குப் பெயரே இல்லையாம்இருந்தது ஒரு தெருஅதற்கெதற்குப் பெயர் என்று விட்டுவிட்டார்கள்போலசிவப்புத் தொப்பி அணிந்த மஹ்மூதப்பா கட்டித்தந்த பள்ளிவாசல் கதை தெரியுமா உங்களுக்குஒரே இரவில் கட்டிமுடித்த பள்ளி அதுஜின்னுங்க கட்டினப் பள்ளிஇதோ குழாயடியில் சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும் மம்மதும்மாவைக் கேளுங்கள்.


நான் தாருல் சாஹினா திண்ணையில் போய் உட்கார்ந்ததும் தெருவே வந்து ஒப்பாரி வைத்ததுஇவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று ஒரு நொடி குழம்பிப் போனேன்பின் மம்மதும்மாவைப் பார்த்ததும் எல்லாம் புரிந்ததுஊரில் எது நடந்தாலும் மம்மதும்மாவின் ஜின் அவரிடம் சொல்லிவிடும்அவரறியாத ரகசியம் ஏதுமுண்டாபொங்கிவரும் கண்ணீரை மூக்கால் வழித்துப் போட்டுதைக்காப் பள்ளி ஹவுளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார் மம்மதும்மா. “தோப்பில் குணமாகனும்னு தாயும்மா தலைமாட்டுல வச்சு நேச்சை சொன்னாபடச்சோன் கைவிட்டுட்டான்ஆனா இவ தண்ணி ஊத்திட்டிருக்காஎல்லாம் விதி” என்றார் மொய்தீன் பிச்சை மோதீன். ‘இந்த மண்ணுக்க கத தெரிஞ்ச ஒரே ஆள் தோப்பிலாக்கும்இனி யாரிருக்கா மோனே’ என்று வருத்தப்பட்டார் வெட்டுவத்தி மம்மேலிஉண்மைதான்வேம்படி பள்ளி பற்றிய கதையெல்லாம் எந்த வரலாற்றறிஞருக்குத் தெரியும்தாஹா நபி தோன்றிய அற்புதத்தை அடுத்த தலைமுறைக்கு இனி யார் சொல்வதுஇதையெல்லாம் யோசித்தபோதுதான் புத்தன் ஆறும் பொழிக்கடவும் நினைவுக்கு வந்ததுஅவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்மம்மதும்மா எதிரில் வந்தார். ‘தாயும்மாக்க அனுமதியில்லாம ஆரும் இங்கொ வரவும் முடியாதுபோவவும் முடியாது’ என்றார்தாயும்மாவின் தலைமாட்டில் விளக்குக்குத் திரியும் எண்ணெயும் வாங்கிவிளக்கேற்றிவிட்டுத் திரும்பினேன்அஞ்சுவண்ணம் தெருவில் தைக்காப் பள்ளியைவிட உயரமான வீடுகள் நிறைய இருந்தன. “எங்கப் போற” என்று கேட்டார் மம்மதும்மா. “மேகரைக்கு” என்றேன். “எல்லாரும் அங்கிருந்துதான் இங்கொ வருவாங்கநீயென்ன மாத்தி பண்ற” என்றார். “நான் இப்படித்தான போயிருக்கேன்” என்றேன்நெஞ்சின் மீது கைவைத்து யா அல்லா” என்றபடி குடத்துடன் சென்றார் மம்மதும்மா.


நான் மேகரைக்குச் சென்றேன். ‘கூனன் தோப்பையொட்டி இருந்த மம்மேலியின் குடிசைக்குள் பார்த்தேன்யாருமில்லைபொழிக்கடவில் புல்பாஸ் அலைந்துகொண்டிருந்தான்அவனிடம் தோப்பில் இறந்த தகவலைத் துறைக்குள் சொல்லிவிடுமாறு கூறினேன்செய்தியைக் கேட்டதும் அவன் மயங்கி விழுந்தான்அவனைப் பெரும்பாடுபட்டுத் தெளியவைத்தேன்மணலில் அமர்ந்து கதறி அழுதான்சமாதானம் சொன்னால் கேட்கக்கூடிய நிலையிலில்லை அவன்மம்மக்கண்ணுவை நினைத்து அவன் அழுதது நினைவுக்கு வந்தது. “எங்களோட நெலமலாம் யாருக்கும் தெரியாதுஎங்க கஷ்டநஷ்டத்தையெல்லாம் அவரு சொல்லாம இருந்துருந்தா எங்கள யாரு மதிச்சிருப்பாநாங்க முன்னேறன்னும்னுதான் அவரு ஆசப்பட்டாருஅவரும் இல்லாட்டி இந்த கடலோட கதையெல்லாம் யாரு சொல்லியிருப்பா!” என்று அழுதுகொண்டே கேட்டான்மண் தனக்குள் அடுக்கிவைத்திருந்த ரகசியங்களெல்லாம் தோப்பிலுக்கு யார் சொல்லியிருப்பார்கள்ஒருவேளை நீல உடையணிந்த ஜூவாலை முகம்கொண்ட குமரிப்பெண் அவருடைய கனவில் வந்து சொல்லியிருப்பாரோதங்ஙள் மை தடவிப் பார்த்தது போல்இவரும் மை தடவிப் பார்த்துத் தெரிந்துகொண்டாராதமிழிலக்கியம் பெரிதாகப் படித்ததில்லைதமிழ்மொழிகூட அவருக்கு எழுதவராதுபிறகு எப்படி இது சாத்தியமானதென்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். “எவ்ளோ சொல்லி என்னசிறந்த எழுத்தாளர்கள்ல அவரச் சேக்கலயேஇஸ்லாமிய எழுத்தாளர்கள்ல சிறந்த எழுத்தாளர்ன்னு தான இன்னமும் சொல்றானுங்க” என்னையுமறியாமல் சொன்னேன்.


புல்பாஸ் வேகமாக எழுந்து சென்றான்அவன் எங்கு சென்றான் என்பதைக் கவனிக்காமல்கடலையே பார்த்தபடியிருந்தேன்மீண்டும் அஞ்சுவண்ணம் தெருவுக்குப் போக வேண்டும் என்று தோன்றியதுஆலிப் புலவர் மெஹராஜ் மாலையை அரங்கேற்றிய வேம்படியைப் பார்க்க வேண்டும்தாஹா நபி அங்கே தோன்றப் போகிறார் என்று நூஹூ நபி காலத்தில் அவரோடு கப்பலில் வந்த காக்கை சுமந்து வந்து போட்ட வேப்பங்கொட்டையில் முளைத்த மரத்தினடியில்தான் இருக்கிறது வேம்படி பள்ளிஎத்தனை வரலாறுகள்எத்தனை கதைகள்எத்தனை புனைவுகள்வரலாறு என்பதே புனைவுதானோகாலம் காலமாக வாய்வழியாக காதுகளில் எழுதிய வரலாற்றின் பெயர்தான் கதையோஅந்த வரலாற்றைத்தான் தோப்பில் சொல்லியிருக்கிறாரோஅவரே உருவாக்கிய தென்பத்தை கிராமத்திற்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியதுஉடனே எழுந்தேன்.


முட்டைத்தாளி படர்ந்து கிடக்கும்புன்னை இலைகள் மிதக்கும் புன்னை மூட்டு ஆற்றைக் கடந்து வேகமாக நடந்தேன்புத்தம் வீடாயிருந்து சவ்தா மன்சிலாகிப் போன வீட்டைப் பார்க்கும் ஆவலில் போனேன்பலவிதக் கனவுகளோடு போன எனக்கு அதிர்ச்சிதான்தென்பத்தை கிராமமே அசைவற்றுக் கிடந்ததுமரங்கள்இலைகள்மனிதர்கள்விலங்குகள்வீடுகள்பொருட்கள் என எவரும் எதுவும் அசையவில்லைபொருட்காட்சியில் பார்ப்பது போல் இருந்தது தென்பத்தை கிராமம்அகமது கண்ணு சாய்வு நாற்காலியில் அசைவற்றுக் கிடந்தார்உள்ளே மரியம் பீவி சமையற்கட்டிலிருந்து திரைச்சீலையை விலக்கிப் பார்த்தபடி இருந்தார்குளத்தில்பள்ளியில்வீதியில் எங்கும் எதுவும் அசையவில்லைதோப்பில் தன் அசைவை நிறுத்திக்கொண்டதும் அவர் கற்பனையில் உருவான கிராமமும் தன் அசைவை நிறுத்திக்கொண்டது போலும்இனி அங்கிருப்பது உதவாது எனக் கிளம்பினேன்நேரமாகிவிட்டதுஇனி வேறெங்கேயும் சொல்லமுடியாதுதேங்காய்ப்பட்டினத்துக்கும் பழைய செமித்தேரியின் பின்பக்கமுள்ள அரயர் பகுதிகளுக்கும் செல்லலாம் என்றிருந்தேன்இனி முடியாதுநேரே போய் வாப்பாவைப் பார்த்துவிட்டுவீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்றெண்ணி வாப்பா வீட்டுக்குச் சென்றேன்.


வாசலில் என்னைப் பார்த்ததும் இன்னிக்கு இது போதும்’ என்றார்மீண்டும் கடுப்பம் கூடின சாயா. “தோப்பிலோட கதைகள்ல எது வரலாறு எது புனைவுன்னு தெரிய மாட்டுதுஎது உண்மைஎது பொய்ன்னு குழப்பமா இருக்கு” என்று சாயா குடித்துக்கொண்டே சொன்னேன். “உண்மைக்கும் பொய்க்கும் பல முகங்கள் இருக்கு” என்றார் வாப்பாமக்ரிப்புக்கு வந்தேன்நேரம் இஷா ஆகிவிட்டதுவாப்பாவோடு பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாதுகிளம்பும்போது திடீரென்று பிச்சப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும் வீசியதுவாப்பா வானத்தைப் பார்த்தார்நானும் பார்த்தேன்இந்தப் புனித ரமலான் மாதத்தில் அதோ வெள்ளைக் குதிரை மீதேறி ஏழாவது வானம் தாண்யிருக்கும் இறைவனைக் காணப் போய்க்கொண்டிருப்பது நீங்கள்தானே தோப்பில்!


காலச்சுவடு, ஜூன் 2019

Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்